கொரோனா பாதித்த 300 பேர் திடீர் மாயம்: சென்னையில் பரபரப்பு

திங்கள், 15 ஜூன் 2020 (08:11 IST)
கொரோனா பாதித்த 300 பேர் திடீர் மாயம்
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 300 பேர்கள் திடீரென மாயமாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு, சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தனியார் ஆய்வாளர்களில் கொரோனா பரிசோதனை செய்து பாசிட்டிவ் ஆனவர்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் மாயமாகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தனியாக ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களின் முகவரி, தொடர்பு எண்ணை தொடர்பு கொண்ட போது அவை போலியாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 300 பேர் சென்னையில் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியாததால் சென்னை மாநகராட்சியும் தமிழக அரசின் சுகாதாரத் துறையும் அதிர்ச்சியில் உள்ளன
 
சென்னையில் மட்டும் 18 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. மருத்துவர் பரிந்துரை சீட்டு உடன் வருபவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் அவர்களிடம் மொபைல் எண், முகவரி உள்பட அனைத்து சேகரிக்கப்படுகின்றன. ஆனால் கொரோனா பாதிப்பு என தெரிந்ததும் பலர் மாயமாகி உள்ளதாகவும், அவர்கள் கொடுத்த மொபைல் எண் மற்றும் முகவரி தவறாக இருந்ததாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஒருசில தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களிடம் விவரங்களை சேகரிப்பது இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு மாயமானவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர். அவர்களால் மேலும் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் உடனடியாக அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்