நேற்று தமிழகத்தில் 1,974 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,974 பேர்களில் 1,415 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,216 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 4,082, தேனாம்பேட்டையில் 3,844, கோடம்பாக்கத்தில் 3,409, அண்ணா நகரில் 3,150 , திரு.வி.க நகரில் 2,922, அடையாறில் 1,809, வளசரவாக்கத்தில் 1,395. திருவொற்றியூரில் 1,172 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.