தமிழகம் முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் தளர்வுகள் பல அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை செய்யாறு பகுதியிலும் பேருந்துகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் செய்யாறு பேருந்து பணிமனையின் கீழ் பணிபுரியும் நடத்துனர்கல் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.