உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

Siva

ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (18:03 IST)
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலகின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில்  இன்று பயங்கர கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மன்னர் நெப்போலியன் பயன்படுத்திய 9 நகைகள் திருடி செல்லப்பட்டுள்ளன.
 
கொள்ளையர்கள் ஹைட்ராலி ஏணி ஒன்றை பயன்படுத்தி, நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து இந்த கொள்ளையை செய்துள்ளனர். பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ், இது "மிகப்பெரிய கொள்ளை" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இங்கு தினமும் சுமார் 30,000 பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
 
லூவ்ரே அருங்காட்சியகத்தில் உள்ள புகழ்பெற்ற 'மோனலிசா' ஓவியம் 1911 ஆம் ஆண்டு திருடப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்