கதறி அழுத பாரீஸ் ரசிகையை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய ஐஸ்வர்யா ராய்.. என்ன நடந்தது?

Siva

திங்கள், 29 செப்டம்பர் 2025 (11:33 IST)
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யா பச்சனுடன் பாரிஸ் நகருக்கு சென்றபோது ஒரு பெண் ரசிகை அழுதுகொண்டிருந்தார். அவரை கட்டிப்பிடித்து தேற்றிய ஐஸ்வர்யாவின் செயல் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.
 
வைரலான வீடியோ ஒன்றில், ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் பாரீஸ் நகரில் தான் தங்கியிருந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்தபோது, கண்ணீருடன் ஒரு ரசிகை அவரிடம் புகைப்படம் கேட்கிறார். அந்த ரசிகையை பார்த்ததும், உடனடியாக அவரை அணைத்து, அவரது கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறுகிறார் ஐஸ்வர்யா. அதன் பிறகு, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
 
ஐஸ்வர்யாவின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஒரு பயனர், "அவர் மிகவும் இனிமையானவர் மற்றும் கண்ணியமானவர். ரசிகையின் பேச்சை கேட்டு, கண்ணீரை துடைத்து ஆறுதல் அளித்தது சிறப்பு" என்று எழுதியுள்ளார். மற்றொருவர், "அவர் எவ்வளவு அடக்கமானவர். அழகு மட்டுமல்ல, நல்ல உள்ளமும் கொண்டவர்" என்று புகழ்ந்துள்ளார்.
 
பாரிஸ் நிறுவனம் ஒன்றின் உலகளாவிய விளம்பர தூதுவராக, ஐஸ்வர்யா நியமிக்கப்பட்ட நிலையில் அதுதொடர்பான பேஷன் ஷோவில் கலந்து கொள்வதற்காக அவர் பாரீஸ் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்