ரமலான் பண்டிகையை முன்னிட்டு சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித இடமாக கருதப்படும் மதினா மசூதி உட்பட மூன்று இடங்களில் நேற்று தற்கொலை படையினரால் குண்டு வெடிப்பு நடைப்பெற்றுள்ளது.
சவுதி அரேபியா நாட்டில் ஒரே நாளில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைப்பெற்றுள்ளது. அதில் இஸ்லாமியர்களின் புனித இடமாக கருதப்படும் மதினா மசூதியில் தற்கொலை படை தாக்குதல் மூலம் நடைப்பெற்ற குண்டு வெடிப்பில் 4 காவலர்கள் உயிரிழந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடைப்பெற்றதால் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் இஸ்லாமியர்களின் நோன்பினை முறிக்கயடிக்க நடத்தப்பட்ட சம்பவமாக கூறப்படுகிறது.