ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டுவெடிப்பு...6 பேர் பலி

திங்கள், 27 மார்ச் 2023 (19:38 IST)
ஆப்கானிஸ்தான்  நாட்டின் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே இன்று குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்துள்ளது. இதில், 6பேர் உயிரிழந்துள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்கப்படைகள் ஆப்கானில் இருந்து  வெளியேறிய பின்னர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி தலைமையிலான தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, 20 ஆண்டுகளுக்குப் பின் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் பழமைவாதத்தைப் பின்பற்றச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்தி வருஇகின்றனர்.

கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்படுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தலிபான் தீவிரவாதிகள்  அவ்வப்போது, வன்முறைச் செயல்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று, தலைநகர் காபூலில் உள்ள இந்துக்கள்,சீக்கியர்கள் வசிக்கும் கார்டா பர்வான் பகுதியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

இதில்,6 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துளனர்.  மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்