பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பொருளாதார நெருக்கடி உள்ளதால் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தாலீபான் கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலி. செய்திவாசிப்பாளராக உள்ள நிலையில், அவர் மீது இன்று இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதில், மர்வியா மாலிக் உயிர் தப்பினார். கடந்த 2018 ஆம் ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில், முதல்செய்திவாசிப்பாளராக அறியப்படும் அவர், திரு நங்கைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில், அவர் ஒரு அறுவைச் சிகிச்சைக்காக லாகூர் வந்தபோது, அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.