ஜம்மு-காஷ்மீருக்கு நுழையும் இந்திய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: பயங்கரவாதிகள் மிரட்டல்

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (09:49 IST)
ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் தனிமம் அம்மாநில அரசுக்கு சொந்தமானது என்றும் அம்மாநில மக்களுக்காக அந்த வளம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய நிறுவனங்கள் அந்த வளத்தை திருட நினைத்தால் தாக்குதல் நடத்துவோம் என்றும் பயங்கரவாதி அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5.9 மில்லியன் டன் லித்தியம் என்ற கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செல்போன் லேப்டாப் டிஜிட்டல் கேமராவுக்கான பேட்டரிகள் செய்ய மூலப்பொருள்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியா லித்தியம் கனிமத்தை 100% இறக்குமதி செய்து வரும் நிலையில் தற்போது இந்தியாவிலேயே 5.9 மில்லியன் டன் லித்தியம் கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் இது குறித்து பயங்கரவாத அமைப்பு ஒன்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கிடைத்துள்ள லித்தியம் அம்மாநில வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் ஜம்மு காஷ்மீருக்குள் லித்தியம் எடுக்க நுழையும் இந்திய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்