பக்தாதியை கண்டுபிடிக்க உதவிய நாய்கள் எப்படிப்பட்டவை? – வைரலான வீடியோ!

Webdunia
ஞாயிறு, 3 நவம்பர் 2019 (12:28 IST)
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பக்தாதி இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அவனை கண்டுபிடிக்க பழக்கப்பட்ட நாய்கள் எப்படிப்பட்டவை என்று விளக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவன் அபுபக்கர் பக்தாதியை பிடிக்க அமெரிக்க ராணுவம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

சிரியாவில் பதுங்கியிருந்த பக்தாதியை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது வெடிக்குண்டை வெடிக்க செய்து பக்தாதி தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்கா செய்தி வெளியிட்டுள்ளது. பக்தாதியை கண்டுபிடிக்க ஏகப்பட்ட உளவுத்துறையினர் தீவிரமான பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர். இதற்காகவே பிரத்யேகமாக பயிற்சியளிக்கப்பட்ட உளவு நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த உளவு நாய்கள் பெல்ஜிய மிலினாய்ஸ் வகையை சேர்ந்தவை என கூறப்படுகின்றன. இராணுவத்திலும், காவலிலும் ஐரோப்பாவில் பெருமளவு பயன்படுத்தப்படும் இந்த வகை நாய்கள் பல மீட்டர் உயரமான சுவர்களில் ஏறுவது, அதிக தூரம் தாவுவது என பலவகைகளில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்