இதுக்கெல்லாம் பயந்து கார்ட்டூனை தடுக்க மாட்டோம்! – பிரான்ஸுக்கு எதிராக வங்க தேசத்தில் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (08:36 IST)
பயங்கரவாத தாக்குதலுக்கு பயந்து கருத்து சுதந்திரத்தை விட முடியாது என பிரான்ஸ் அதிபர் கூறியுள்ள நிலையில் அவருக்கு எதிராக வங்க தேசத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.

முகமது நபியை கேலி செய்து பிரான்ஸின் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையில் வெளியான கார்ட்டுனை வைத்து பாடம் நடத்திய ஆசிரியரை இளைஞர் ஒருவர் தலையை வெட்டி கொன்றது ப்ரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பிரான்ஸ் சர்ச் ஒன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலால் மூவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய கார்ட்டூனை தடுக்கவில்லை என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் மீது துருக்கி, ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து உருவபொம்மையை எரித்து வருகின்றனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் நினைவேந்தலில் கலந்து கொண்ட அதிபர் இமானுவேல் மக்ரோன் “பாரீஸ் கருத்து சுதந்திரம் கொண்ட நாடு. இந்த அச்சுறுத்தல்களுக்காக கார்ட்டூனை தடை செய்ய முடியாது” என கூறியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்க தேசத்தின் தலைநகர் டாக்காவில் 50 ஆயிரத்திற்கும் மேல் கூடிய இஸ்லாமிய மக்கள் மக்ரோனுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

கொரோனா காலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்