இலவச இண்டெர்நெட்டுக்காக இப்படியா? – வைஃபை நிறுனத்தின் பெயரை குழந்தைக்கு வைத்த சம்பவம்

ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:45 IST)
சுவிட்சர்லாந்தில் இலவச இணைய வசதியை பெறுவதற்காக இணைய சேவை நிறுவனத்தின் பெயரையே குழந்தைக்கு வைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ட்வைஃபை என்ற நிறுவனம் வைஃபை இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கள் நிறுவன பெயரை சூட்டினால் குழந்தையின் பெற்றோருக்கு 18 ஆண்டுகளுக்கு இலவச இணைய வசதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பலர் கடந்து போயிருந்தாலும் ஒரு தம்பதியினர் மட்டும் தங்கள் குழந்தைக்கு ட்வைஃபை என பெயரிட்டுள்ளனர். இந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த நிறுவனமும் அறிவித்தபடியே 18 ஆண்டுகள் இலவச இணைய வசதி அளித்துள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்