ஹிட்லர் வாழ்ந்த வீட்டை இடிக்க ஆஸ்திரிய அரசு அதிரடி முடிவு!!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2016 (11:37 IST)
ஆஸ்திரியா நாட்டில் இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்த ஹிட்லர் வீட்டை இடித்து தள்ள ஆஸ்திரிய அரசு அதிரடி முடிவு செய்துள்ளது.

 
இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் ஹிட்லர். அந்த காலகட்டத்தில் உலகமே அவரை பார்த்து பயந்தது. அவர் பிறந்து வளர்ந்த வீடு, ஆஸ்திரியா நாட்டில் பிரனவ் நகரில் உள்ளது. இந்த வீட்டை இடிக்க ஆஸ்திரிய அரசு அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.
 
ஆஸ்திரிய அரசு நியமித்த ஒரு ஆணையத்தின் முடிவின் பேரில்தான், ஹிட்லரின் வீட்டை இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
ஹிட்லரின் வீடு நாஜி கட்சி ஆதரவாளர்களின் புனித தலம் போல மாறி வருவதை தடுக்கத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 
 
ஹிட்லரின் வீட்டை இடிக்க வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்