ஜெ.க்கு தீபாவளி எங்கு?: அப்பல்லோ, சிங்கப்பூர், போயஸ் கார்டன்!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2016 (11:27 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 4 வார காலமாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது துறைகளை நிதியமைச்சர் பன்னீர் செல்வம் கவனித்து வருகிறார்.


 
 
இந்நிலையில் முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு சென்றால் அவர் விரைவில் பழைய நிலமைக்கு திரும்பிவிடுவார் என கூறப்படுகிறது.
 
முதல்வர் ஜெயலலிதாவை சிங்கப்பூர் அழைத்து செல்ல அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், தமிழக அரசு அதற்கு இன்னமும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
 
தமிழக அரசு ஓகே சொல்லிவிட்டால் விரைவில் முதல்வர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார். ஆனால் ஜெயலலிதா கடல் கடந்து வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற விரும்பவில்லை என சசிகலா தரப்பு கூறுவதாகவும். போயஸ் கார்டனுக்கு அழைத்து சென்று அங்கு வைத்து சிகிச்சையை தொடர்ந்தால் அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பலாம் என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் நடப்பதாக கூறப்படுகிறது.
 
தீபாவளி நெருங்கி வருவதால் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவிலிருந்து இன்னும் டிஸ்சார்ஜ் ஆகாமல் இருப்பது அதிமுக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பல்லோ, சிங்கப்பூர், போயஸ் கார்டன் என மாறி மாறி வரும் தகவல்களால் குழப்பமடைந்துள்ளனர் தொண்டர்கள்.
 
முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் மக்கள் பணியை ஆற்ற வேண்டும் என்பதே கட்சிகள் கடந்து அனைவரது எதிர்பார்ப்பும்.
 
வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்