சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (15:09 IST)
சீனாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், பின்னர் குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சீனாவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக சீனாவில் நடக்க இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 10ம் தேதி முதல் தொடங்கி நடக்கவிருந்த இந்த போட்டிகள் 2023 வரை ஒத்திவைக்கப்படுவதாக ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்