துபாயில் உள்ள முதல் முறையாக செயற்கை காடு மற்றும் கடற்கரையுடன் ஓட்டல் ஒன்று கட்டப்படுகிறது.
தொழில்நுடபத்தின் மூலம் செயற்கை முறையில் அசதுவதில் ஆர்வம் காட்டி வரும் துபாயில், தற்போது ஒரு புது முயற்சில் இறங்கியுள்ளது.
துபாயில் எண்ணெய் வளத்தில் தவிர வேறு எதுவும் இல்லை. அதனால் மரம் மற்றும் காடுகளை செயற்கையான முறையில் செய்து வருகிறது. தற்போது சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் கவரும் வகையில் அதிநவீன ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது.
அதில் காடுகள், கடற்கரை, மரங்கள், நீரை வாரியடிக்கும் நீச்சல் குளம், மூடுபனி போன்றவைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த அதி நவீன ஓட்டல் ரூ. 2300 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஓட்டல் வருகிற 2018-ம் ஆண்டு திறக்கப்பட உள்ளது.