நிர்வாணமாக படுத்து மசாஜ் செய்ய சொல்லி கட்டாயம்: சசிகலா புஷ்பா குடும்பம் மீது புகார்

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (17:16 IST)
நிர்வாண மாசஜ் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாக சசிகலா புஷ்பா, அவரது கணவன் மற்றும் மகன் ஆகியோர் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 

 
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர் கட்சி தலைமைக்கு எதிராக மாறியதன் விளைவு. அவரது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகளை கட்சியுடன் இணைத்து வெளிகாட்டியது என்றும் கூறலாம். 
 
இதில் அவரது வீட்டில் பணிபுரிந்தத பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. முதலில் சசிகலா புஷ்பா பேர் மட்டும் புகாரில் இருந்தது. தற்போது அவரது கணவர் மற்றும் மகன் மீதும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
 
நான் 2011ஆம் ஆண்டு சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அவர் எப்போதும் கறாராக இருப்பார். சில சமயம் மது போதையில்தான் வீட்டூக்கு வருவார். வந்தவுடன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக கட்டிலில் படுத்து, என்னை மசாஜ் செய்ய சொல்வார். நான் சரியாக மசாஜ் செய்யவில்லை என்றால் அசிங்கமாக திட்டி, காலால் எட்டி உதைப்பார்.
 
அவரது கணவரும் ஒரு நாள், அக்காவுக்கு மட்டும்தான் மசாஜ் பண்ணி விடுவியா, எனக்கும் பண்ணி விடு என்று சொல்லி கட்டிலில் நிர்வாணமாகப் படுத்துக் கொண்டார். முடியாது என்று நான் அழுதேன். மசாஜ் பண்ண வில்லையென்றால் கொன்று விடுவேன் என்று கன்னத்தில் அடித்தார். வேறு வழியின்றி மசாஜ் செய்து விட்டேன். பிறகு அவருடைய ஆண் உறுப்பில் எண்ணெய் தடவி, மசாஜ் செய் என்று கொடுமைப்படுத்தினார், இப்படி பல முறை அவருக்கு செய்திருக்கிறேன்.
 
சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப், நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது, என் மேல் வந்து விழுவான். என் மீது கை வைத்து பாலியல் தொல்லை கொடுப்பான். இதை சசிகலா புஷ்பாவிடம் சொன்னேன். அதற்கு அவர், அவனுக்கு அப்படிப்பட்ட வயசு, அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கோ, நனும் 18 வயசுல அப்படித்தான் இருந்தேன் என்று சொல்வார். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
 
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா அவரது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகளை கட்சியுடன் இணைத்து வெளிகாட்டியது, அவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட குற்றங்கள் செய்த பெண் ஒருவரை எம்.பி ஆக்கும் முன்னே தெரிய வேண்டும் அல்லது இதுபோன்றவர்களை கட்சியில் சேர்க்கும் போதும் தெரிய வேண்டும். எல்லாம் தெரிந்தாலும் பணம் மற்றும் அட்கள் பலத்தை வைத்து கட்சியின் உறுப்பினர்களை பதவியில் அமர வைப்பது கட்சித் தலைமை செய்யும் தவறு. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்