மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் முதல் சோதனை விண்கலமான ஆர்டெமிஸ் 1 நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது.
அமெரிக்கா – ரஷ்யா இடையே பனிப்போர் முற்றி இருந்த 1960களில் விண்வெளி பயணங்களில் இருநாடுகளும் கடும் போட்டியிட்டு வந்தன. அப்போது 1969ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி உலக சரித்திரத்தில் பெரும் சாதனையை படைத்தது.
அதற்கு பின் மனிதனின் நிலவு பயணத்திற்காக நாசா பல பில்லியன்களை செலவு செய்த நிலையில் 1972ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சிகளில் இருந்து நாசா விலகியது. அதற்கு பின் வேறு எந்த நாடுகளும் இந்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் தற்போது நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் ப்ரொக்ராமை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான ஓரியன் விண்கலத்தை சுமந்து செல்கிறது. நாளை கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுகிறது.