கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய அர்ஜெண்டினா! – பொதுமக்கள் கொண்டாட்டம்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (11:06 IST)
லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகில் பல நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வருகிறது. சில நாடுகளில் மட்டுமே கருக்கலைப்புக்கு சட்டரீதியான அனுமதி உள்ள நிலையில் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பு சட்டரீதியான அனுமதி அளிக்க கோரி பெண்ணிய அமைப்புகள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதுதொடர்பாக சமீபத்தில் செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது கருக்கலைத்தலுக்கு சட்டரீதியான அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது அர்ஜெண்டினா. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே முதன்முறையாக இந்த சட்டரீதியான அனுமதி வழங்கும் முதல் நாடு அர்ஜெண்டினா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்