கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 'அரபு நேட்டோ' என்ற புதிய ராணுவ கூட்டமைப்பை உருவாக்க முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன.
அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், எகிப்து முன்மொழிந்த இத்திட்டத்திற்கு பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
எகிப்து அரசு கடந்த 2015-ம் ஆண்டிலேயே ஒருங்கிணைந்த அரபு ராணுவ கூட்டமைப்பை உருவாக்க முன்மொழிந்தது. ஆனால், இஸ்ரேல் அண்மையில் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, கத்தாரில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் இத்திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.