அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரும்பினால், போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று தெரிவித்துள்ளார்.
"உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரும்பினால், ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர முடியும். அல்லது, அவர் தொடர்ந்து போரிடலாம். இந்த போர் எப்படி தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒபாமா காலத்தில் ரஷ்யாவிற்கு சென்ற கிரிமியாவை மீட்க முடியாது. மேலும், உக்ரைன் நேட்டோவில் சேர கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது!!!"