மலாலாவின் நிதி திரட்டும் திட்டத்தில் இணைந்தது ஆப்பிள்

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (23:59 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவும் ஆப்பிள் நிறுவனமும் இணைந்து உலகில் உள்ள குறிப்பாக இந்தியாவில் உள்ள பெண்களின் கல்விக்கு நிதி திரட்ட கைகோர்த்துள்ளது.

உலகெங்கும் உள்ள பெண்களின் கல்வித்தரத்தை உயர்த்த மலாலா நிதி திரட்டி வருகிறார். இந்த முயற்சிக்கு தற்போது ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இணைந்துள்ளது. இந்த திட்டத்தில் ஆப்பிள் இணைந்துள்ளதால் இருமடங்கு நிதி குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் தன்னுடன் இணைந்தது குறித்து மலாலா செய்தியாளர்களிடம் கூறியபோது, ' உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தங்களது எதிர்காலத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள், தொண்டுகள் ஆகியவற்றின் மூலம் உலகில் உள்ள மக்களுக்கு கல்வி மற்றும் அதிகாரத்தை அளித்து உதவி வருகிறது. பெண்களுக்காக நிதி வழங்குவதன் மதிப்பை ஆப்பிள் நிறுவனம் தெரிந்து முன்வந்தமைக்கு எனது நன்றி' என்று கூறியுள்ளார்.

மலாலாவில் இந்த திட்டத்தால் இந்தியா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், லெபனான், துருக்கி, நைஜீரியா உள்பட பல நாடுகளின் பெண்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்