இந்நிலையில் இப்போது புதிதாக தற்போது பறவைக் காய்ச்சல் நோய் பரவிவருவதாக வெளியான செய்தியினை சீனாவின் வேளாண் அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பண்ணை ஒன்றில் மொத்தமுள்ள 7,850 கோழிகளில் 4,500 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருந்ததால் அவற்றைக் கொன்றுள்ளனர். H5N1 என்ற இந்த வைரஸ் நோய் பறவைகளுக்கு சுவாச நோயை ஏற்படுத்தும் தன்மை உடையது எனவும் அது மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது.