தனி தீவில் தனிமைப்படுத்தப்படுத்தப்படும் ஆஸ்திரேலியர்கள்: ஏன்??

செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (14:42 IST)
சீனா சென்று திரும்பிய ஆஸ்திரேலியர்களை தனி தீவில் தனிமைப்படுத்தப்படும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது ஆஸ்திரேலியா.

 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து ஏறத்தாழ 2700 கி.மீ தொலைவில் இந்தோனீசியாவுக்கு அருகில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில் இவர்களை இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்துகிறது ஆஸ்திரேலியா.
 
சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்த 89 குழந்தைகள் உட்பட 243 பேர் கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்கிறார்கள். ஆஸ்திரேலிய நாட்டிற்குள் முறைகேடாக நுழைய முயல்பவர்களைத் தடுத்து கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள்.
 
இப்போது அங்கு நான்கு இலங்கை குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு எதிராக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்