பசிபிக் கடலில் நிலநடுக்கம்: ஆஸ்திரேலிய தீவுகளில் மினி சுனாமி!!
திங்கள், 20 நவம்பர் 2017 (18:44 IST)
பசிபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலிய தீவுகளில் சிறிய அளவில் சுனாமி தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சில நிமிடங்கள் நீடித்தது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 4 மணி நேரத்தில் கடலில் சுனாமி அலை தாக்கியது.
ஆனால், இது பெரிய சுனாமி அலையாக உருவாகவில்லை. வழக்கத்தைவிட 1 மீட்டர் அளவுக்கு உயரமாக கடல் அலை எழுந்ததது.
இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், தீவிர சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கடற்கரையை ஒட்டிய 300 கி.மீ பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.