ரஷிய கட்டுப்பாட்டு பகுதியில் எண்ணெய்க்கிணறு மீது தாக்குதல்

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (21:47 IST)
ரஷியா- உக்ரைன்  நாடுகளிடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில் கிரிமியாவில் உள்ள கச்சா எண்ணெய்க் கிணறு மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ரஷிய ராணுவம் உக்ரைன் மீது போரிட்டு ஓராண்டிற்கு மேல் ஆகியுள்ளது. இப்போரினால் இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுடன் அப்பாவி மக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இப்போரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடம் அந்த நாடுகளுடன் நேட்டோ கூட்டமைப்பும் உக்ரைனுக்கு  நிதியுதவி மற்றும் ஆயுத உதவி செய்து வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைனின் டின்புரோ, யுமென் நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது ரஷியா. இத்தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா தீபகற்பத்தின் சிவஸ்டொபெல் நகரில் இருக்கும் கச்சா சேமிப்புக் கிடங்கு மீது இன்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

உக்ரைன் ராணுவம் நடத்திய இத்தாக்குதலில் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு  முழுவதும் தீப்பற்றறி எரிந்தது. இதில், உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்