ரஷியா அதிபர் புதின் உத்தரவுப்படி, அந்த நாட்டு ராணுவம் உக்ரைன் நாட்டு மீது போர் தொடுத்துள்ளது. இப்போர் தொடங்கி 1 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இதுவரை இருநாடுகளும் சமரச முடிவு எட்டப்படவில்லை.
உக்ரைனுக்கு ஆதரவாக நேச நாடுகள் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, கன்டா, பின்லாந்து போன்ற நாடுககள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் ரஷியா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் இதுகுறித்து பேசினார். இந்த நிலையில், இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியுடனும் அவர் பேசியுள்ளார். அதில், நெருக்கடியான சூழலை கூட்டாகக் கையாளள வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகிறது.