ஆப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் அம்மா பேக் : அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (11:44 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படம் பதிந்த பை (பேக்), ஆப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதும் பள்ளி குழந்தைகளுக்கு பல திட்டங்களை அறிவித்தார். இலவச லேப்டாப், காலணி, புத்தக பை, பஸ் பாஸ் என பல சலுகைகள் வழங்கப்பட்டது. அதேபோல், பொதுமக்களுக்கு கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டது.
 
ஆனால், லேப்டாப், கிரைண்டர், மின்விசிறி மற்றும் மின்விசிறி ஆகிய பொருட்களை கடத்தி அண்டை மாநிலங்களில் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
 
அதேபோல், தமிழ்நாட்டில் இருந்து பல பொருட்கள் கடத்தப்படுகின்றன. ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அரசு வழங்கும் அரிசி அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. 
 
ஆனால், ஆப்பிரிக்கா வரைக்கும் கடத்தி செல்லப்படும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா படம் பதித்த, பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக அளிக்கப்பட்ட புத்தகப் பைகளை ஆப்பிரிக்காவுக்கு கடத்தி ரூ.130க்கு விற்பனை செய்கிறார்கள் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியானது.
 
இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்