அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் 59 வயது கமலா ஹாரிஸ் அவர்களை மருத்துவ குழுவினர் உடற்தகுதி பரிசோதனை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கமலா ஹாரிஸ் ஆரோக்கியமான வாழ்க்கையை கடைபிடிக்கிறார் என்றும், கடுமையான வேலைப்பளு இருந்தாலும், அவருடைய உணவு முறை சரியாக உள்ளது என்றும், நல்ல உடல் நலத்துடன் உயர்ந்த பதவியை வகிக்க தேவையான மனநிலையுடன் உள்ளார் என்றும், புகையிலை மற்றும் ஆல்கஹாலை அவர் பயன்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
78 வயதாகவும் டிரம்ப், தனது உடல்நிலை அறிக்கையை வெளியிட மறுத்துள்ள நிலையில், கமலா ஹாரிஸ் மருத்துவ அறிக்கை வெளியிட்டது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமலா ஹாரிஸ் உடல் தகுதி மற்றும் மனநிலை தகுதியை மெடிக்கல் சர்டிபிகேட் மூலம் நிரூபித்துள்ள நிலையில், அவருக்கு அதிக வாக்குகள் விழ வாய்ப்பு இருப்பதாக தேர்தல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.