ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
உக்ரைன் எல்லையில் படைகளை ரஷ்யா குவித்து வரும் நிலையில் அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
ரஷ்யா மேற்கொண்டு உக்ரைன் நோக்கி முன்னேறினால் சர்வதேச அளவில் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்ய படைகளை திரும்பப் பெறாவிட்டால் ரஷ்யா மீது பொருளாதார கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்றும் இது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்
ஆனால் இந்த எச்சரிக்கை குறித்து சற்றும் கவலைப்படாமல் ரஷ்யா உக்ரைன் நோக்கி படைகளை குவித்து வருவது போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.