முகக்கவசம் அணிவது குறித்து அமெரிக்க நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (07:30 IST)
அமெரிக்காவில் மே 5ஆம் தேதி வரை அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவுப் பிறப்பித்த நிலையில் அந்த உத்தரவை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அமெரிக்காவில் பொது போக்குவரத்தின் போது முகக்கவசம் அணிய தேவையில்லை என புளோரிடா மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
 
மேலும் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து புளோரிடா மாவட்ட மக்கள் இனி முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்