ஒருவாரத்தில் சரணடைய வேண்டும்: மத்திய அமைச்சரின் மகனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:38 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகளை காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா  மகன் ஆசிஸ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
 
இந்த நிலையில் நான்கு விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற  அமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி இன்னும் ஒரு வாரத்தில் அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 4ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்