அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற பந்தயப்புறா
அமெரிக்காவை சேர்ந்த பந்தய புறா ஒன்று பறந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு வந்துள்ளதை அடுத்து அந்த பந்தயப்புறா நோய்த்தொற்று பயம் காரணமாக கருணைக் கொலை செய்யப்படும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அமெரிக்காவில் உள்ள பந்தய புறா ஒன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள தோட்டம் ஒன்றில் சமீபத்தில் சிக்கியது. நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு அந்த பறவையை கருணை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் உச்சத்தில் இருக்கும் நிலையில் அந்த பறவைக்கும் பாதிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் கொரோனாவை பரப்புவதற்கு சதி செய்ததாகவும் அஞ்சப்படுகிறது
இந்த நிலையில் ஆஸ்திரேலியா புகுந்த அமெரிக்க பந்தயப்புறா நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கருணை கொலை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்கா ஒப்புக் கொண்டால் அந்த பறவையை மீண்டும் அந்நாட்டிற்கு அனுப்பவும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க பந்தயப்புறா அதற்கான விளைவுகளை எதிர் கொள்ளும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்