சீனாவிடம் மறைமுகமாக கையேந்திய அமெரிக்கா

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (15:43 IST)
வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத சோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் திணறும் அமெரிக்கா சீனாவிடம் உதவி கேட்டுள்ளது.


 

 
வடகொரியா சர்வதேச ஒப்பந்த விதிமுறைக்கு மாறாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் ஐ.நா.சபையும், அமெரிக்காவும் வடகொரியா நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. ஆனாலும் வடகொரியா நிறுத்தவில்லை தொடர்ந்து அணு ஆயுத சோதனையை நடத்திக்கொண்டுதான் உள்ளது.
 
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்த போது மூன்றாம் உலக போர் அபாயம் ஏற்பட்டது. ஆனால் மற்ற நாடுகளின் பேச்சுவார்த்தை மூலம் போர் அபாயம் தணிந்தது. 
 
தற்போது வடகொரியா ஜப்பான் கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இதையடுத்து டிரம்ப் டுவிட்டரில் கூறியதாவது:-
 
தென்கொரியா மற்றும் ஜப்பான் வடகொரியாவை எதிர்க்கொள்ள நீண்ட காலம் ஆகும். ஒருவேளை சீனாவல் வடகொரியாவில் மீது அழுத்தமான நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் வடகொரியாவின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர முடியும் என பதிவிட்டுள்ளார்.
 
இதன்மூலம் அமெரிக்கா தென்கொரியா மற்றும் ஜப்பான் உதவியோடு வடகொரியாவை எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கா தற்போது சீனாவிடம் மறைமுகமாக உதவி கேட்டுள்ளது.   
அடுத்த கட்டுரையில்