12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: கூகுள் தாய் நிறுவனம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:29 IST)
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் என்ற நிறுவனம் பன்னிரண்டாயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமேசான் நிறுவனத்தில் இருந்து 18,000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து பத்தாயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர் 
 
இந்த நிலையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் என்ற நிறுவனத்தில் இருந்து 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதனால் நான் நிறுவனத்தின் பணி புரியும் ஊழியர்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்