அதிக பர்கர்கள் சாப்பிட்டு முதியவர் கின்னஸ் சாதனை !

Sinoj

செவ்வாய், 5 மார்ச் 2024 (20:23 IST)
அமெரிக்காவில் அதிக பர்கர்களை சாப்பிட்டு முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
 
உலகின் எதையாவது சாதிக்க வேண்டும் என்றும் வித்தியாசமாக எதையாவது செய்து, பிரபலமாக வேண்டும் என்று பலர் இருக்கிறார்கள்.
 
அந்த வகையில்,  வாழ்நாளில் அதிக Big Mac பர்கர்களை சபபிட்ட நபர் என்ற சாதனையை டொனால்ட் கார்ஸ்கே என்பவர் படைத்துள்ளார்.
 
அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் கார்ஸ்கே. இவருக்கு வயது 70. இந்த வயதிலும் சாதனைக்கு வயது ஒரு தடையில்லை என்று கூறுவதற்கேற்ப,  இந்த சாதனையை படைதிருக்கிறார் அவர்.
 
அதாவது நாளொன்றுக்கு 9 பர்க்கர்கள் சாப்பிட்டு வந்த நிலையில்,  தற்போது அதை 2 ஆக குறைத்துள்ளார். இவர்   34,128 Bigmac பர்கர்களை சாப்பிட்டு அதிக பர்கர்கள் சாப்பிட்டவர் என்ற சாதனை 24 ஆண்டுகளாக தக்க வைத்து வரும் அவர், தன் வாழ்நாள் முழுவதும் பர்கர்  சாப்பிடுவதை  நிறுத்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்