சுமார் 93.1 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணடிப்பு --ஐநா வருத்தம்

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (08:00 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு சுமார் 93.1கோடி டன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக உணவுக்கழிவு குறியீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்ய நாட்டில் அதன் தலைநகரமான ரைநோவில் ஐக்கிய நாடுகள் சபையில் சூழல் தொடர்பான நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பதற்காகன் ஐநா சூழல் திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில்,ஐநா சுழல் திட்டம் உணவுக் கழிவுகளைக் குறைக்க அரசுகளுடன் இணைந்து செயல்படும் வ்ராப் என்ற அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள உணவுக் கழிவு குறியீட்டுஅறிக்கையில் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

உணவுகள் கழிவுகள் வீணடிப்பு என்பது உலகில் பணக்காரன் நாடுகளுக்கு இணையாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.2019 ஆம் ஆண்டு 93.1 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டுள்ளது எனவும் இதைக் கொண்டு உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் 7 முறை உணவு கொடுத்திருக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு தனிநபரும் சுமார் 50 கிலோ உணவுப்பொருட்களை வீணடிப்பதாகவும், அமெரிக்காவில் சுமார் 59 கிலோ உணவுப்பொருட்களை ஒவ்வொருவரும் வீணடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்