மாணவியுடன் வந்து பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெற்ற வளர்ப்பு நாய்!

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (21:14 IST)
அமெரிக்காவின் நியூஜெர்சியில் சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவருடன் கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்றுள்ளது வளர்ப்பு நாய்.

அமெரிக்க நாட்டில் நியூஜெர்சியில் சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 90க்கு மேற்பட்ட பட்டப்பிரிவுகளின் கீழ் ஆயிரக்கணக்கான மாணணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பல்கலைக்கழத்தில்  மாற்றுத்திறனாளி மாணவியான கிரேஸ் மரியானி என்பவர் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அவர் வகுப்புக்குச் செல்லும் போதெல்லாம்  தன் வீட்டில் வளர்த்து வரும் ஜஸ்டின் என்ற செல்ல நாயையும் அழைத்துச் சென்றுள்ளார்.

மாணவி கிரேசுடன் அனைத்து வகுப்புகளிலும் அந்த நாயும் கலந்து கொண்டுள்ளது. அந்த நாயின் நன்றி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டும் வகையில், பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

அதன்படி, பல்கலைக்கழகம் வந்த கிரேஸ் பட்டப்படிப்பை முடித்ததற்கான பட்டயச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர், பல்கலைக்கழகம் சார்பில்  நாய்க்கும் ஒரு ஆடை அணிவித்து, டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது.

அந்தச் சான்றிதழை ஜஸ்டின் நாய் தன் வாயில் கவ்விச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்