சீனாவில் பரவும் புதுவித வைரஸ்.. உலக சுகாதார மையம் கண்காணிப்பு..!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:51 IST)
சீனாவில் புதுவிதமான வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் சீனாவை கண்காணித்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
 
சீனாவில் புதுவித வைரஸ் காரணமாக மக்களுக்கு காய்ச்சல் வருவதாக கூறப்பட்டாலும் சீன அரசு அதை நிமோனியா காய்ச்சல் என்று கூறி வருகிறது.  
 
புதுவித வைரஸ் எதுவும் பரவவில்லை என்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாகத்தான் ஒரு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் சீனா, உலக சுகாதார மையத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.
 
 இந்த நிலையில் சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் சீனாவில் உள்ள சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்றும் உலக சுகாதாரமய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஆனால் அதே நேரத்தில் சீனாவுக்கு செல்வோருக்கு எந்தவிதமான விதிமுறைகளையும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் இந்த புது வைரஸும் உலகம் முழுவதும் பரவுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்