கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்த நர்ஸ்: அதிரவைக்கும் பின்னணி

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (12:43 IST)
14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்த வழக்கில் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஆண் நர்ஸ் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி கடந்த 14 வருடங்களாக கோமாவில் இருக்கும் நிலையில் அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்நிலையில் அந்த பெண்ணின் உடலில் மாற்றத்தைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், அந்த பெண்ணை பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. உடனடியாக அந்த பெண் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்தார்.  இது அந்த பெண்ணின் உறவினர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
 
போலீஸார் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில் அதே மருத்துவமனையில் ஆண் நர்சாக பணிபுரியும் நாதன் சுதர்லாந்த்(36) என்பவன் இந்த இரக்கமற்ற செயலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அந்த கேடுகெட்டவனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்