இரை தேடி ரோட்டுக்கு வந்த அனகோண்டா: மக்களே உஷார்!!

வியாழன், 2 மே 2019 (11:21 IST)
மிகப்பெரியா பாம்பாக கருதப்படும் அன்கோண்டா வகை பாம்பு ஒன்று பிசியான சாலையை மெதுவாக க்ராஸ் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
பிரேசில் நாட்டின் போர்டோ வெல்ஹோ நகரின் முக்கிய சாலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக அந்த சாலையில் வாகனங்களில் சென்றுக்கொண்டிருந்த போது ஒரு முனையில் இருந்து அன்கொண்டா பாம்பு ஒன்று வந்தது. 
 
அது சாலையின் மறுமுனைக்கு செல்ல முற்பட்டது. இதனால், சாலையில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, அனகோண்டாவிற்கு வழி விடப்பட்டது. இது குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 
அந்த அனகொண்டா 3 மீட்டர் நீளமும், 30 கிலோ எடையும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அனகோண்டா ஏன் சாலைக்கு வந்திருக்கும் என்ற கேள்விக்கு உயிரியலாளர் ஒருவர் தனக்கான உணவை தேடி அதி சாலை பகுதிக்கு வந்திருக்க கூடும். நாய்கள், பூனைகளின் வாசனையை நுகர்ந்து வந்திருக்ககூடும் என தெரிவித்தார். மேலும், மக்களும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்