மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் தடவி புகைப்படத்தை வெளியிட்ட பெண்! வியக்கவைக்கும் காரணம் !

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (11:16 IST)
அமெரிக்க பெண் ஒருவர் தன்னுடைய மாதவிடாய் ரத்தத்தை மாதந்தோறும் முகத்தில் தடவி புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதிர்ச்சி அடையவைத்துள்ளார்.  


 
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டிமட்ரா நைக்ஸ் (26) என்கிற பெண், சமீப காலங்களாகவே ரத்தத்துடன் கூடிய  புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பார்க்கும்போதே அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாக ஒரு சிலர்  கருத்து பதிவிட்டாலும், பலரும் இந்த பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இதற்கான காரணத்தை அந்த பெண்ணிடம் கேட்கும் பொழுது அவர் கூறிய பதில் பலரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.  பருவமடைந்த பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமான இந்த மாதவிடாய் ஒரு இயற்கையான நிகழ்வு. இந்த விழிப்புணர்வு கருத்துக்கள் மக்களிடையே பரப்பப்பட்டு வந்தாலும், இன்று வரை  பெண்களை ஒதுக்கி வைக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்துகொண்டேதான் வருகிறது.
 
இதற்காக தான் டிமட்ரா தன்னுடைய 12 வயதில் பூப்படைந்தவுடன் வெட்கி தலைகுனிந்து, நண்பர்களிடம் நெருங்கி பழக கூச்சப்பட்டுள்ளார். இந்த விஷயம் தன்னுடைய ஆண் நண்பர்களுக்கு தெரிந்துவிட கூடாது என நினைத்து  தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.  பிறகு தன்னுடைய  20 வயதிலிருந்து இந்த மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிய முயற்சித்து  டிமட்ரா  தன்னுடைய மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் தடவி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.


 
ஏனென்றால் நம்முடைய சமூகம் மாதவிடாய் ஒரு அழுக்கு, சிரமமானது என நமக்கு சொல்லியிருக்கிறது . ஆனால் அதுவும் ஒரு இயற்கையான நிகழ்வு தான். நான் இந்த சடங்கின் மூலம் இன்பம் அடைகிறேன். இந்த சமூகம் எப்பொழுது இதுவும் சாதாரணமான நிகழ்வு என நினைக்கிறதோ, அதுவரை நான் இந்த புகைப்படங்களை மாதம் தோறும் பதிவிடுவேன் என அவர் கூறிவருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்