அடிப்பட்ட நிலையில் மருந்துக்கடையில் உதவி கேட்ட நாய் – வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (17:05 IST)
துருக்கியில் காலில் அடிப்பட்ட தெரு நாய் ஒன்று மருந்து கடைக்கு சென்று உதவி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

துருக்கியில் மருந்து கடை நடத்தி வருபவர் செங்கிஸ். விலங்குகள் ஆர்வலரான செங்கிஸ் தெரு நாய்கள் உறங்குவதற்கான படுக்கை வசதியையும் தந்து கடையின் ஒரு பகுதியிலேயே ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நாய் ஒன்று அவரது கடைக்குள் நுழைந்திருக்கிறது. அதற்கு செங்கிஸ் உணவு வைத்திருக்கிறார். ஆனால் அந்த நாய அந்த உணவை சாப்பிடாமல் செங்கிஸை பார்த்து தனது காலை நீட்டியுள்ளது. அதன் காலில் அடிப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்திருக்கிறது. அது உதவி கேட்பதை புரிந்து கொண்டு செங்கிஸ் அதற்கு மருந்திட்டிருக்கிறார். பிறகு அந்த நாய் செங்கிஸ் அருகிலேயே படுத்துக் கொண்டது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் பார்த்து வருகின்றனர். தன்னால் பேச முடியாவிட்டாலும் மருந்து கடையில் வந்து உதவி கேட்ட நாயின் புத்திசாலிதனத்தையும், செங்கிஸின் அன்பையும் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்