இந்தோனேசியா நாட்டில்ல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுமார் 17 பேர் பலியானதாகவும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளகவும் செய்திகள் வெளிவந்துள்ளதால் அந்நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் ஆட்டம் கண்டதால் மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் சாலைகளில் மக்கள் வெள்ளம் கூடியது. மேலும் இந்தோனேசிய நாட்டின் வானிலை ஆய்வு மையம் அந்நாட்டு மக்களுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. உடனடியாக கடற்கரை பகுதியில் வாழும் மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.