7 வயதில் மார்பக அறுவை சிகிச்சை: வைரலாகும் சிறுமியின் புகைப்படம்!!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (15:25 IST)
அமெரிக்காவை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவருக்கு சீனாவில் மார்பக சிகிச்சை மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 
 
கலிபோர்னியாவை சேர்ந்த ஜூலியட் என்ற 7 வயது சிறுமிக்குதான் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த சிறுமிக்கு தனது மார்பங்களை பெரிதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதனால் தனது தாயிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
 
ஆனால், இவரது தாயோ உனக்கு 7 வயதுதான் ஆகிறது. நீ வளரும் போது உன் உடல் உறுப்புகளும் வளரும் என தெரிவித்துள்ளார். இந்த பதிலால் சமாதானம் ஆகாத சிறுமி தனது தாயிடம் தினமும் இது குறித்து வற்புறுத்தி வந்துள்ளார். 
 
இதனால் வேறுவழியின்றி தனது மகளை சீனா அழைத்து சென்று மார்பக அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனை மகளுக்கு கிரிஸ்துமஸ் பரிசாக வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்