இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (15:24 IST)
சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கிரிமினல் ஆய்வு பிரிவு துணைத்தலைவர் சென் செய்கு பிரபல வலைதளமான வெய்போவில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் ஒருவர் பெரிய சைஸ் பாலிதீன் கவர் ஒன்றை எடுத்து விரிக்கிறார். பின்னர், பாலிதீன் கவர் மறைத்த அந்த நபரின் உடல் பகுதிகள் சுத்தமாக தெரியவில்லை. பின்னால் உள்ள மரம், செடி, புதர்கள் மட்டும் தெளிவாக தெரிகிறது.
பாலிதீன் கவரை 360 டிகிரியில் சுற்றுகிறார். சரியாக அந்த கவர் மறைக்கும் உடல் பகுதிகள் மட்டும் தெரியவில்லை. இந்த கண்டுபிடிப்பு ராணுவத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குவாண்டம் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. ஆனால் வீடியோ நிபுணர்கள், இன்விசிபிள் ஆடைக்கு வாய்ப்பே இல்லை. இது வெறும் வீடியோ வித்தைதான் என தெரிவித்துள்ளனர்.