மீண்டும் கண்டெடுக்கப்பட்ட 3500 ஆண்டுகால 17 மம்மிகள்!!

Webdunia
ஞாயிறு, 14 மே 2017 (10:40 IST)
எகிப்த் பிரமிடுகள் ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் தன்னுடன் புதைத்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் மேலும் 17 மம்மிகள் எகிப்த் பிரமிடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.


 
 
அந்த காலங்களில் எகிப்த் நாட்டை ஆண்ட மன்னர்கள் இறந்தவுடன் அவர்களது உடல்களை பதப்படுத்தி பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன.
 
இந்த உடல்களை மம்மி என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இந்நிலையில், டவுனா காபால் மாவட்டத்தில் இருக்கும் பழமையான பிரமிடுகளில் 17 மம்மிகளை ஆராய்சியாளர்கள் கண்டறித்துள்ளனர்.
 
அதனுடன் தங்கத்திலான தகடுகளையும் கண்டறிந்துள்ளனர். ஆனால், கண்டறியப்பட்ட மம்மிகள் அரச குடும்பங்களை சேர்ந்தது போல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், கடந்த மாதம் 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்