3500 ஆண்டு பழமை வாய்ந்த மம்மிகள் கண்டுபிடிப்பு!!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (10:37 IST)
எகிப்தின் லச்சர் நகர் அருகே பழங்கால கல்லறையில் இருந்து 8 மம்மிகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


 
 
எகிப்தின் பண்டைய கால நாகரீகத்தில் அரச குடும்பங்களை சேர்ந்தவர்களின் உடல்களை பெரிய கல்லறைக்குள் பாதுகாப்பாக வைப்பது வழக்கம். இந்த உடல்கள் மம்மி என அழைக்கப்படுகின்றன.
 
தற்போது இது தொடர்பான ஆராய்ச்சிகள் எகிப்தில் நடந்து வருகிறது. லக்சார் நகரத்தில் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறையிலிருந்து 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
அந்த மம்மிகளுடன் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள், மரத்தால் செய்யப்பட்ட வண்ணம் தீட்டிய பெட்டிகள், ஆயிரத்திற்கும் அதிகமான இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடைய சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்