பெண்ணை முத்தமிட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (15:23 IST)
துபாயில் டோர் டெலிவரி செய்வதற்கு சென்ற இந்திய வாலிபர், வீட்டில் இருந்த பெண்ணை முத்தமிட்டதால், காவல்துறையினர் அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் அந்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 

 
 
துபாயில் உள்ள மளிகை கடை ஒன்றில் பெண் ஒருவர் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதை டெலிவரி செய்வதற்கு கடையில் பணிபுரிந்த இந்திய வாலிபர் ஒருவர் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். வீட்டில் அந்த பெண் தோட்டத்தில் இருந்ததால் உள்ள வர அனுமதித்துள்ளார்.
 
வீட்டின் உள்ளே சென்றே வாலிபர் பொருட்களை வைத்துவிட்டு, அந்த பெண்னை முத்தமிட்டுள்ளார். அந்த பெண் காவல்துறையில் புகார் செய்வேன் என்றவுடன் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அந்த பெண் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வாலிபரை கைது செய்து விசாரணை செய்தனர்.
 
விசாரணையில், வீட்டுக்குச் சென்றபோது அந்த பெண் மது அருந்தி இருந்ததாகவும், என்னை உள்ளே அழைத்து மது அருந்த வற்புறுத்தியதாகவும், மது அருந்த மறுத்ததால் என் மீது பொய்யான புகார் கூறியுள்ளார், என்று கூறினார்.
 
அதன்படி அந்த பெண்ணின் கழுத்தில் டி.என்.ஏ டெஸ்ட் செய்ததில், முத்தமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. 
 
அடுத்த கட்டுரையில்