2022- ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு !

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (20:24 IST)
2022 ஆம் ஆண்டிற்கான   இலக்கியத்திற்கான நோபல் பரிசு  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆனி எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகில் மிக  உயரிய விருதாகக் கருதப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்தும், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சிறந்த சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதை  நோபல் கமிட்டி குழு தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

ஏற்கனவே 2022 ஆம் ஆண்டிறகாக இயற்பியல், மருத்துவம், வேதியியல் ஆகிய துறைகளில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு  நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில்  இன்று இலக்கியத்திற்கான   நோபல் பரிசு  பிரான்ஸ் நாட்டைச்  சேர்ந்த ஆனி எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இவருக்கு வயது 82 ஆகும். இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.  தன் எழுத்துகளில்,பாலியல், மொழி தொடர்பாகச் சமத்துவத்தை வலியுறுத்திவந்துள்ளதால் அவருக்கு இப்பரிசு வழங்கபப்ட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்